கண்ணாடி பாட்டீல் மூலம் 750 எம்.எல் தண்ணீரை ‘அம்மா’ குடிநீர் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் 1 லிட்டர் ‘அம்மா’ குடிநீர் பாட்டீல் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் விற்கப்பட்டு வருகிறது. இந்தப் பாட்டீல்கள் பேருந்து நிலையங்களில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 80ஆயிரம் 1 லிட்டர் ‘அம்மா’ குடிநீர் பாட்டீல்கள் அரசு சார்பில் விற்கப்பட்டுள்ளன. எனினும் இதனை வாங்குவோர் சிலர் 1 லிட்டர் குடிநீரையும் முழுவதும் குடிக்காமல் மிச்சம் வைத்துவிட்டு செல்வதால், அதிகளவில் பாட்டீல்கள் தேங்கியுள்ளன. எனவே தமிழ்நாடு அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி புதிதாக கண்ணாடியில் தயாரிக்கப்பட்ட 750 எம்.எல் அம்மா குடிநீர் பாட்டீலை விற்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாட்டீலின் விலை 5 அல்லது 7 ரூபாயாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்ணாடி பாட்டீல்களின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தண்ணீர் வீணாவதையும் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான புதிய இயந்திரம் வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய பாட்டீல்களின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.