பிரபல பக்திப்பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

பிரபல பக்திப்பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
பிரபல பக்திப்பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
Published on

பிரபல பக்திப்பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 

இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்‍கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்‍தி பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். தஞ்சாவூர் அருகே இசைப் பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த இந்த சகோதரிகள், K.G. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபால ஐயர் ஆகியோரிடம் முறையான இசைப்பயிற்சி பெற்று, பின்னாளில் சென்னைக்‍கு குடியேறி ஏராளமான பக்திப் பாடல்களை பாடி புகழ் பெற்றனர்.

சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி கடந்த 1992-ம் ஆண்டு காலமான நிலையில், மூத்தவரான ஜெயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்‍கு வயது 80. முருகக் கடவுள் மீது இயற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகளை புகழின் உச்சிக்‍கு கொண்டு சென்றது. அழகெல்லாம் முருகனே என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். 

சூலமங்கலம் ஜெயலட்சுமியின் உடல் அஞ்சலிக்‍காக அவரது பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்‍கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com