41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி

41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி
41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி
Published on

41 ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுக்கப்பட்ட மகன் டென்மார்க் நாட்டில் இருந்து வந்து தன் தாயை சந்தித்த சம்பவம்
சென்னை நடந்துள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த தனலட்சுமி - கலியமூர்த்தி தம்பதியினருக்கு 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி பிறந்த குழந்தை டேவிட். டேவிட்டை அவரது மூத்த சகோதரர் ராஜனையும் வறுமையின் காரணமாக பல்லாவரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனலட்சுமி சேர்த்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த காப்பகத்திற்கு சென்று பார்த்தபோது, காப்பகத்தை சேர்ந்தவர்கள் இரு குழந்தைகளையும் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள் தத்தெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். டென்மார்க் தம்பதிகளால் வழங்கப்பட்ட டேவிட்டின் குழந்தைப்பருவ புகைப்படம் மட்டுமே தனலட்சுமியிடம் இருந்ததுள்ளது. 

தன் மகன்கள் வெளிநாட்டில் நல்ல முறையில் வளர்வார்கள் என மனதை தேற்றிக்கொண்ட அந்த தாய் வாழ்ந்துள்ளார். இவ்வாறு 41 ஆண்டுகள் ஓடிவிட்டன. மற்றொரு பக்கம் டேவிட் தன் தாயுடன் 2 வயது குழந்தையாக இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தோடு தாயை தேட ஆரம்பித்து இருக்கிறார். அவரது தேடலின் முதற்கட்டமாக மார்ட்டின் மனுவேல் ராஸ்முஸேன் எனும் பெயரில் டென்மார்க்கில் வாழ்ந்து வரும் மூத்த சகோதரர் ராஜனை கண்டு பிடித்து இருக்கிறார். அந்த உற்சாகத்தில் நம்பிக்கையோடு தன் தாயை தேடும் பயணத்தை தொடர்ந்துள்ளார். 

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், அஞ்சலி பவார் மற்றும் அருண் தோஹ்லே ஆகிய சமூக செயற்பாட்டாளரகளை சந்தித்து தனது தேடலை மீண்டும் துவக்கி இருக்கிறார். அப்போது அவர்கள் உருவாக்கிய ஆவணபடம் சமூக வலைதளங்களில் பரவி தன் தாய் தனலட்சுமியை சென்றடைய பெரும் உதவி செய்திருக்கிறது. இதையடுத்து சிறு வயது புகைப்படம் மூலம் தாயும் மகனும் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் இருவரும் மொழி தெரியாமல் பாசத்தை பகிர்ந்து கொண்ட காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com