ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத் தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு.
அனைத்து காலநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு வீடுகள் உள்ளிட்ட வசதிகள் அடங்கிய சிறப்புத் திட்டம்.
2019-20-ல் மதிப்பிடப்பட்ட ரூ.14,314 கோடி வருவாய் பற்றாக்குறை, திருத்த மதிப்பீட்டில் ரூ.25,071 கோடியாக உயர்வு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.
குடியிருப்பு வாடகை ஒப்பந்தங்களுக்கு முத்திரைத் தாளுக்கான வரி 1%ல் இருந்து 0.25% வரை குறைப்பு.
மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.563 கோடியில் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5%ஆக உயர்த்தப்படும்.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், கடன் உத்தரவாத நிதிக்குழும திட்டத்தின்கீழ் வட்டி மானியம் உயர்வு.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தம்.
ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும்.
அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். நிர்பயா நிதியின்கீழ் பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா.
அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை. அம்மா உணவகத் திட்டத்தை செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.
ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.