சென்னையில் ஜூலை 6 முதல் சில கட்டுபாடுகள் - சில தளர்வுகள் அறிவிப்பு..

சென்னையில் ஜூலை 6 முதல் சில கட்டுபாடுகள் - சில தளர்வுகள் அறிவிப்பு..
சென்னையில் ஜூலை 6 முதல் சில கட்டுபாடுகள் - சில தளர்வுகள் அறிவிப்பு..
Published on

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 31.07.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 5 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு காலத்தில் இந்த தளர்வுகள் பொருந்தாது. ஜூலை 6 முதல் 31ம் தேதிவரை இந்த தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

1. சென்னைப் பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். ஆனால் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது

2. தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பார்சல்க்கு மட்டும் அனுமதி.

3. காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி இயங்கலாம்.

4. வணிக வளாகங்கள் (Malls) தவிர்த்து அனைத்து தனிக்கடைகள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) முன்னதாக அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி இயங்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com