தொடங்கியது மழைக்காலம்: கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்!

தொடங்கியது மழைக்காலம்: கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்!
தொடங்கியது மழைக்காலம்: கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்!
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்?

  • மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • கழிவுநீர், மழைநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும்
  • வீடு அருகில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • வீட்டிற்குள் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை எலக்ட்ரீசியனிடம் உறுதி செய்வது அவசியம்
  • வீட்டின் சுவர்களிலும், மின் இணைப்புகளிலும் நீர்க்கசிவு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்
  • வீட்டின் சுவர்களில் விரிசல்கள் இருப்பின் அதை பொறியாளர் உதவியுடன் சரி செய்ய வேண்டும்
  • தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியுள்ளவர்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம்
  • வீட்டிற்குள் மழைநீர் புகுந்துவிட்டால், உடனே மெயின் சுவிட்ச் போர்டை ஆஃப் செய்ய வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com