ஏ.சி முதல் இலவச Wifi, ரேடியோ, டிவி வசதி வரை... அசத்தும் தருமபுரியின் ‘சூரிய ஒளி’ பேருந்து நிலையம்!

சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு குளிர்சாதன பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தார்.
சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா, தருமபுரி
சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா, தருமபுரிPT Desk
Published on

உலகிலேயே முதன் முறையாக, தருமபுரியில் சூரிய ஒளி மின்சக்தி (Solar energy) மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலைய வடிவமைப்புக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 58 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரி
சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரிPT Desk

இதை திறந்துவைத்ததுடன், நிழற்கூடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டார் ஆட்சியர் சாந்தி.

இந்நிழற்கூடத்தில் இருக்கும் வசதிகள்:

* குளிர்சாதன வசதி,

* பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி,

* தானியங்கி பரிவர்த்தனை இயந்திரம்,

* சிறப்பு அங்காடி,

* தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம்,

* 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி,

* 24 மணி நேரமும் இலவச வைஃபை வசதி,

* அதிநவீன வர்த்தக விளம்பர எல்இடி பலகை,

சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரி
சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரிPT Desk

* குளிர்சாதன மற்றும் பாதுகாக்கப்பட்ட தாய் சேய் பாலூட்டுஅறை,

* மினி நூலக வசதி,

* தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி,

* தொலைக்காட்சி,

* செல்ஃபி பாயிண்ட்,

* கார்டன் சீட் அவுட்,

* செல் சார்ஜிங் பாயிண்ட்

ஆகியவை உள்ளன.

உலக அளவில் இத்தனை வசதிகளும் உள்ள முதல் பேருந்து நிலையம் இதுதான் என சொல்கின்றனர் அதிகாரிகள். இவற்றுடன், பேருந்து நிலையத்தில் திமுக அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த வாசகங்களும் அமையப்பெற்றுள்ளன.

சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரி
சூரிய ஒளி பேருந்து நிழற்கூடம், தருமபுரிPT Desk

இந்நிகழ்வில் எம்பி டாக்டர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com