இறைச்சிக் கடைகளில் குவியும் கூட்டம் ! கேள்வி குறியாகும் சமூக இடைவெளி

இறைச்சிக் கடைகளில் குவியும் கூட்டம் ! கேள்வி குறியாகும் சமூக இடைவெளி
இறைச்சிக் கடைகளில் குவியும் கூட்டம் ! கேள்வி குறியாகும் சமூக இடைவெளி
Published on

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கும் மிக முக்கியமான முன்னெச்சரிக்கையாக கருதப்படுவது சமூக இடைவெளியும், தனிமைப்படுத்துதலும்தான். ஆனால் இந்தியாவில் சமூக இடைவெளிகள் முழுவதுமாக கடைபிடிக்கப்படுகிறதா என்றால் இல்லையென்றுதான் கூற வேண்டும். பொது மக்கள் தங்களது சமூக இடைவெளியை காய்கறி சந்தைகளிலும், இறைச்சிக் கடைகளில் அதிகம் பின்பற்ற வேண்டும். ஆனால், வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளிலும், காய்கறிச் சந்தைகளிலும் சமூக இடைவெளி பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இது அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட 21 நாளில் எந்த ஞாயிற்றுக்கிழமைகளிலும் இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளிக்காக கடை உரிமையாளர்களும், அரசு நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சமூக இடைவெளியை மக்கள்தான் பின்பற்ற வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் அன்றைய ஒருநாள் மட்டுமே இறைச்சி வாங்க முடியும். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் காணப்படுவது இயல்பானது. ஆனால் ஊரடங்குக்கு பின்பு பெரும்பாலும் விடுமுறை நாளாகவே இருக்கிறது. எனவே குறிப்பிட்ட நாளில்தான் கறி வாங்கி சமைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

உதாரணத்துக்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறி, இறைச்சிக்கடையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்ததால் காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் தொற்று நோய்கள் தர்க்கம் ஏற்படும் அபாயம் நிலை உருவாகி உள்ளது.போலீசார் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதேபோல தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள இறைச்சி கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்களை கூட்டமாக கூட்டி வைத்து இறைச்சி விற்பனை செய்து வருவதாக அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவுப்படி, எட்டிபட்டியில் உள்ளஇறைச்சி கடையை சார் ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு கடைபிடிக்க வலியுறுத்திய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், இறைச்சிக் கடையை சுகாதாரமற்ற முறையில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் கடை நடத்தியதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கொரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில் அலட்சியமாக கடத்தியதாக இறைச்சி கடை உரிமையாளரை எச்சரித்து, சார் ஆட்சியர் மு. பிரதாப் மாட்டிறைச்சி கடைக்கு சீல் வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com