காஞ்சிபுரம் சரகத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக இதுவரை 2245 வழக்குகள் மற்றும் 2014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கொரோனா இரண்டாம் அலை வீரியம் தமிழகமெங்கும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்து வருகிறார்கள். நோய் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2245 வழக்குகள் மற்றும் 2014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 618 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 898 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 742 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 729 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 654 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.