ரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்

ரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்
ரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்
Published on

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 10 நகரங்களில் மின்னணு நிர்வாக வசதியை ஏற்படுத்தவும், செல்போன் செயலி வடிவமைப்பதற்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஒப்பந்த புள்ளிகள் கோரியது. நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரை 'எல் அண்ட் டி' நிறுவனம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த 'ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, டெண்டர் நடைமுறைகள் வெளிப்படையாக நடைபெறவில்லை எனவும், ஒப்பந்தப் புள்ளிகளின் தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட அம்சங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த டெண்டர் மீதான மேல் நடவடிக்கைகளை தொடரக் கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் 'எல் அண்ட் டி' நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com