சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வந்த சுமார் 150 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்நிலையில், நாக்பூர் உரிமம் பெற்று இயங்கும் பெரிய அளவிலான ஆலைகளில் ஆய்வு நடத்தப்படாமல், மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வுகள் நடத்துவதாக சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வுகளில் இதுவரை விதிமீறியதாக 90 ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட நிர்வாகம், ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் சமரசமின்றி அனைத்து தொழிற்சாலைகளிலும் முறையாக ஆய்வுகள் மேற்கொள்வதாகவும், விதிமீறல் நடைபெறும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.