இலங்கை மீனவர்களுக்கு எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரை

இலங்கை மீனவர்களுக்கு எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரை
இலங்கை மீனவர்களுக்கு எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரை
Published on

இந்தியக் கடற்படையினரின் கண்ணியம் குறித்து, இலங்கை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறும்படி அந்நாட்டு மீனவர்களுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த‌ 7ஆம் தேதி,‌நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 50 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் 10 பேர் மீன் பிடித்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 10 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்திய கடற்படையினர் தாக்கினார்களா என்று அவர்களிடம் நீதிபதி சந்திரன் கேட்டார். அதற்கு, இல்லை எனப் பதிலளித்த இலங்கை மீனவர்கள், உணவு உள்ளிட்டவை தங்களுக்கு வழங்கப்பட்டதோடு கண்ணியமாக நடத்தப்பட்டதாகவும் கூறினர். பின்னர் ஏன் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்? என்று ‌நீதிபதி கேட்டார். இலங்கை சென்றதும் ‌அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகளின் கண்ணியம் குறித்து எடுத்துரைக்குமாறு அந்த மீனவர்களுக்கு நீதிபதி ‌சந்திரன் அறிவுரை வழங்கினார். பின்னர் இலங்கை மீனவர்கள் 10 பேரையும், வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com