சிவகாசியில் இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் ஆசோக் பூஷன் அமர்வு நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு விற்பனைக்கும்,உற்பத்திக்கும் சில நிபந்தனைகளுடன் தீர்ப்பளித்தது. அதில் குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் மற்றும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று அலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் 1000திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன், உச்சநீதிமன்றம் தீர்ப்பால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது இதனால் காலவரையின்றி அனைத்து பட்டாசு கம்பெனிகளும் மூடப்படும் என்றார். இத்னால் நாடி முழுவதும் சுமார் 1 கோடி பேர் வேலை இழப்பார்கள். 1000திற்கும் மேற்பட்ட பட்டாசு கம்பெனிகளும் மூடப்படும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து பசுமை பட்டாசு என்பதே கிடையாது. அதனை இந்த சுழலில் தயாரிக்க முடியாது என்றார். மக்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் டிசம்பர் 11 நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சிவாகாசியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது