சிவகங்கை மோதல்: பலி எண்ணிக்கை உயர்வு

சிவகங்கை மோதல்: பலி எண்ணிக்கை உயர்வு
சிவகங்கை மோதல்: பலி எண்ணிக்கை உயர்வு
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3ஆவது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு மற்றும் கச்சநத்தம் கிராமங்கள். கச்சநத்தம் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன் விரோதம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக இரு பிரிவினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தினர், கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை கத்தியால் சராமாரியாக தாக்கினர். இச்சம்பவத்தில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், தனசேகரன்,ஆறுமுகம், சண்முகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தனர். தொட‌ர்ந்து மற்ற ஆறு பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூன்றாவதாக ஒருவர் உயிழந்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com