தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது இடிந்து விழுந்த சுவர் - காரைக்குடி அருகே பரிதாபம்

தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது இடிந்து விழுந்த சுவர் - காரைக்குடி அருகே பரிதாபம்
தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது இடிந்து விழுந்த சுவர் - காரைக்குடி அருகே பரிதாபம்
Published on

தொடர் மழையின் காரணமாக காரைக்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி சீனிவாச நகர் பகுதியில் வசித்து வந்தவர் வீரப்பன். இவரது மனைவி சரஸ்வதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இவரது வீட்டின் சுவர் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் முதியவர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com