கல்லல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.
அழிந்துவரும் பனைமரத்தின் பெருமை குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிளாமிச்சம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவிலும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு பிரிவிலும் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 42 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், உற்சாகமாக கலந்து கொண்ட வீரர்கள் நேர்த்தியாக நொங்கு வண்டியை செலுத்தினர். இதனை சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கைதட்டி ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இரு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்த வீரர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், 500 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.