கீழடி 8-ம் கட்ட அகழாய்வு, 460 பொருட்கள் கண்டெடுப்பு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கீழடி 8-ம் கட்ட அகழாய்வு, 460 பொருட்கள் கண்டெடுப்பு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கீழடி 8-ம் கட்ட அகழாய்வு, 460 பொருட்கள் கண்டெடுப்பு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Published on

சிவகங்கை மாவட்டம் கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 460 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடியில் பிப்ரவரி 13-ம் தேதி, 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. தனியார் நிலத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நீள் செவ்வக வடிவ தாய கட்டை, செப்பு காசு, சிவப்பு, பச்சை நிற பாசிகள், கழுத்தில் அணியும் பாசி, வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 460 பொருட்கள் கண்டறியப்பட்டன.

இன்று அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தாசில்தார் ரத்னவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்,. இதற்கிடையில், திறந்த வெளி அருங்காட்சியகத்தையும், அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.

அவர்களுடன் அகழாய்வு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி உரையாடினார். அவரிடம் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு பணிகள் இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com