சீர்காழி: அருள்மிகு தர்மராஜா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழா

சீர்காழி: அருள்மிகு தர்மராஜா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழா
சீர்காழி: அருள்மிகு தர்மராஜா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழா
Published on

சீர்காழி அருகே செம்மங்குடியில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தர்மராஜா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில். திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து காளியம்மன் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து தர்மராஜா மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் காட்சி அளித்தார்.

இதையடுத்து மாலையில் பொறைவாய்க்கால் கரையில் இருந்து காப்புக் கட்டிய பக்தர்கள், அம்பாள் கரகத்துடன் அலகு காவடிகள் எடுத்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com