சீர்காழி அருகே திருவெண்காட்டில் மயானத்திற்கு செல்ல சாலை மற்றும் பாலம் இல்லாததால் வயல்வெளி வழியே வாய்க்கால்களில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம் குறித்து நேற்று புதியதலைமுறையில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு. மயான சாலை அமைத்து வாய்க்காலில் பாலம்கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். நேற்று முன்தினம் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், மயானத்திற்கு செல்ல சாலை போதிய வசதி இல்லாததால் வயல்வெளி பகுதியை கடந்து வாய்க்கால்கலில் இறங்கி மறுபுறம் உள்ள மயானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான சாலை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை உழவு செய்யப்பட்ட வாயலின் வழியே கொண்டு சென்று கூவாய்க்காலில் இறங்கி மறுபுறம் அமைந்துள்ள மயாத்திற்கு எடுத்துச் சென்றனர்.
வாய்க்காலின் மேலே மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் நிலையில் அச்சத்துடனே வாய்க்காலை கடந்து சென்றனர். இதேபோல் ஒவ்வொரு முறையும் இறந்தவரின் உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு சிரமங்களை கடந்தே உடல்களை அடக்கம் செய்வதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால் மழைக்காலங்களில் நிலை மிகவும் மோசமாகும்.
எனவே மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர லேண்டும் என திருவெண்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த செய்தி நேற்று புதியதலைமுறையில் ஒளிபரப்பானது.
இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று திருவெண்காட்டிவ் மயான சாலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து கிராமமக்கள் கோரிக்கையை ஏற்று உடனே மயான சாலை அமைக்கவும் மணிக்கரனை கூழவாய்க்காலில் பாலம் கட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பல ஆண்டுகால கோரிக்கை முடிவிற்கு வந்தது.