ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க எளிய கருவி கண்டுபிடித்த மாணவி

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க எளிய கருவி கண்டுபிடித்த மாணவி
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க எளிய கருவி கண்டுபிடித்த மாணவி
Published on

சீர்காழி அருகே ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தையை மீட்கும் எளிய முறையினை வடிவமைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் பக்கீர் முகமது. இவரது மகள் சமீரா அருகே உள்ள வெங்கடேஷ்வரா அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் திருச்சி அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சுஜீத் என்ற குழந்தை இறந்தது. இதனை அறிந்த மாணவி சமீரா, ஆழ்துளைக் கிணறில் விழும் குழந்தைகளை மீட்க எளிய முறை ஒன்றினை சிந்தித்து செயல்படுத்தியுள்ளார். 

அதன்படி பயனற்ற இரு காந்தங்களை பயன்படுத்தி குழந்தையின் பக்கவாட்டு பகுதி வழியே கீழே இறக்கி அவற்றை ஒன்றிணைக்கிறார். பின்னர் ஒருபுறமாக காந்தத்தை மேல் நோக்கி இழுத்து அதன் வழியே பட்டையான கயிறு விட்டு மறுபுறம் இழுக்கும் போது குழந்தை கயிற்றில் அமர்ந்த நிலை ஏற்படுகிறது. அந்த கயிற்றில் முடுச்சி போட்டு குழந்தையை இருக்கும் நிலையில் லாக் செய்து அப்படியே மேல் நோக்கி லாவகமாக இழுக்கலாம் என செயல் விளக்கம் அளித்து காட்டியுள்ளார்.

மேலும் பயனற்ற பொருட்களை கொண்டே இதை உருவாக்கியுள்ளதாகவும் மேம்படுத்தபட்ட அமைப்பாக உருவாக்கினால் 1000 ரூபாயில் இதனை செய்யமுடியும் எனவும் தெரிவித்தார். விளையாட்டு பொருட்களை வைத்து கூட இது போன்ற நல்ல செயல்களை செய்யலாம் என்கிற சமீராவின் எண்ணத்தையும் முயற்சியையும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com