10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை

10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை
10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை
Published on

10ஆம் வகுப்பு தேர்வுகளில் இனி மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை இணைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 12ஆம் வகுப்பின் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 10ஆம் வகுப்பு தேர்வுகளிலும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே தேர்வாக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே தேர்வாக நடத்தப்படுவதன் மூலம், விடைத்தாள்களை ஆசிரியர்கள் அதிக நாட்கள் மதிப்பிட வேண்டாம் என்றும், அந்த நேரத்தை மிச்சப்படுத்தி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியிலும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com