பாடகர் மனோ - அவரின் மகன்கள்
பாடகர் மனோ - அவரின் மகன்கள்முகநூல்

”எனது மகன்களை தவறாக சித்தரிக்கிறாங்க.. அன்று இதுதான் நடந்துச்சு..” - பாடகர் மனோவின் மனைவி கண்ணீர்!

தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர் என்று பாடகர் மனோவின் மனைவியான ஜமிலா கண்ணீருடன் கூறியுள்ளார்.
Published on

செய்தியாளர் - ஆவடி நவீன் குமார்

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுவன் முதலிய இருவரையும், பாடகர் மனோவின் 2 மகன்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் மனோவின் இரண்டு மகன்களும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பாடகர் மனோவின் மனைவியான ஜமிலா, தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர், தன்னையும் தனது மகன்களையும் 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள், இதில் ’எனக்கும் எனது மகன் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நான் தான் போலீஸுக்கு தகவல் செய்து வரவழைத்தேன், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்கு பிர்சனை ஏற்படும் என்ற தாய் உள்ளத்துடன் தான் புகாரளிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

பாடகர் மனோ - அவரின் மகன்கள்
ராயன் வெற்றி.. NEEK-க்கு பிறகு 4வது படத்தை இயக்கும் தனுஷ்.. ஹீரோ இவரா? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

என்ன நடந்தது?

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுவன் இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.

அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உணவு வாங்கிக்கொண்டிருந்த கிருபா மற்றும் சிறுவன் இருவரையும் அழைத்து மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு
பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு புதிய தலைமுறை

இதனால் கிருபாவுடன் வந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடி ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்துள்ளார். ஆனால், காவலர்கள் எதிரிலேயே கிருபா மற்றும் சிறுவனை தாக்கிய மனோவின் மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மனோவின் மகன்கள்
மனோவின் மகன்கள்கோப்புப்படம்

மனோவின் மகன்கள் தாக்கியதில் கிருபா மற்றும் 16 வயது சிறுவனுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மற்ற ஒரு நண்பரும், மனோவின் 2 மகன்களும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

பாடகர் மனோ - அவரின் மகன்கள்
’எழுதி முடிச்சுட்டேன்’ | ’96’ பார்ட் 2.. மீண்டும் வரும் ராம்-ஜானு.. இயக்குநர் கொடுத்த செம்ம அப்டேட்!

எனது மகன்கள் தலைமறைவாகவில்லை..

அன்றைக்கு என்ன நடந்தது என்று பேசியிருக்கும் பாடகர் மனோவின் மனைவி, எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. தொடர்ந்து மகன்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதால் அவமானத்தில் அவர்கள் வெளியே சென்று இருக்கலாம். தற்போது வரை மகன்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என கண்ணீருடன் பேசியுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட மனோ மகன்கள்
தாக்குதலில் ஈடுபட்ட மனோ மகன்கள்pt web

மேலும் விவகாரம் குறித்து பேசியிருக்கும் அவர், நேற்று முன்தினம் எனது மகன்களின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து இருந்தனர். அவர்களை வழி அனுப்ப நானும் எனது மகன்களும் வெளியே சென்றிருந்தோம். அப்போது எங்களையே குருகுரு என பார்த்துக் கொண்டு இருந்த நபரிடம் ஏன் பார்க்கிறாய் என என் மகன் கேட்டார். ஆனால் அதற்கு அவர்கள் தகாத வார்த்தையால் பேசி சினிமா காரர்கள் தானே தெலுங்கு கொல்டி என கேவலமாக பேசினர். பின்னர் அவர்கள் சென்று 15-க்கும் மேற்பட்டோரை அழைத்துவந்து எங்களை தாக்கினர். அதற்குபின்னர் நான்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலிஸை வரவழைத்தோம்.

எனது கணவரும் நானும் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும், போலிஸில் புகாரளித்தால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு பிரச்சினையாகி விடும் என தாயுள்ளத்துடன் தான் புகார் அளிக்கவில்லை.

மாறாக எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும் எனது மகன்கள் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம், மகன்களுக்கும் கை,கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் உள்ளோம் தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடகர் மனோ - அவரின் மகன்கள்
ஜப்பானில் திரையிடப்படும் ஷாருக்கானின் ‘ஜவான்’.. இயக்குநர் அட்லீ சர்ப்ரைஸ் பதிவு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com