தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: இந்தாண்டு ‘சிங்காரச் சென்னை 2.0‘ திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: இந்தாண்டு ‘சிங்காரச் சென்னை 2.0‘ திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: இந்தாண்டு ‘சிங்காரச் சென்னை 2.0‘ திட்டம் தொடக்கம்
Published on

சிங்காரச் சென்னை 2.0 இந்த ஆண்டு தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூ.2,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வழிகளில் கழிவுநீர் தடுப்பு அமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com