சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அதிநவீன அவசர ரெஸ்பான்ஸ் கருவி மற்றும் ஜிபிஎஸ் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து தொடங்கி வைத்தார்.
ஜி.பி.எஸ் உடன் கூடிய 16 நவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவராத காரணத்தால் பல மரணங்கள் நிகழ்வதால், நவீன நுட்பம் மூலம் இந்த சேவையை தொடங்குவதாக ரவி பச்சமுத்து தெரிவித்தார். ஜிபிஎஸ் ஆம்புலன்ஸை அழைப்பதற்கான மொபைல் செயலியையும், 044 - 2000 2020 என்ற தொலைபேசி எண்ணையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவர்கள், ஓட்டுனர்கள், செவிலியர்கள், மருத்துவ சேவை உதவியாளர்கள் 24 மணிநேரமும் இந்த நவீன அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.