குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம்: போராடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்

குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம்: போராடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்
குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம்: போராடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்
Published on

அம்பத்தூர் அருகே, சினிமா பாணியில் குழந்தை தலையில் சில்வர் பாத்திரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ராஜ். இவரது ஒன்றரை வயது மகள் யஷ்விதா, இன்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சில்வர் பாத்திரம், குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நீண்ட நேரம் நீண்ட நேரம் போராடி சில்வர் பாத்திரத்தை எடுக்க முடியாததால், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், சிறுமியின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை அகற்ற முயற்சித்தனர், ஆனால் முடியவில்லை. இதையடுத்து எந்திரம் மூலம் அறுத்து எடுக்க திட்டம் தீட்டினர். குழந்தை என்பதால் எடுக்கும் போது ஏதேனும் விபத்து ஏற்படக்கூடும் என அஞ்சி, சோப்பு நுரை, எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சுமார் 15 நிமிடம் போராடி குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டிருந்த சில்வர் பாத்திரத்தை லாவகமாக அகற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com