காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களும் தமிழிலேயே பெயர்ப்பலகை அமைத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தி உள்ளார்.
கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளிலும் தமிழிலேயே முதலில் பெயர் இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தமிழுக்கு பிறகு பிறமொழிகளில் கடை பெயர்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழியில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டால், எழுத்துக்களின் அளவு முறையே 5, 3, 2 என்ற விகிதத்திலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டால், 5-க்கு 3 என்ற விகிதத்தில் எழுத்துக்கள் அமைதல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடைகளின் பெயர்ப்பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என்பதை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.