அதிர்ச்சி! உத்ராகண்ட்டில் பணியின் போது இடிந்த சுரங்கப்பாதை.. என்ன ஆனார்கள் 40 தொழிலாளர்கள்?

உத்ராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக நீடித்து வருகின்றன. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக நீடிக்கின்றன.

சுமார் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளதால், சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுடன் வாக்கி-டாக்கி மூலம் தொடர்பு கொண்ட அதிகாரிகள், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜனை குழாய் மூலம் அனுப்பி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலார்களை மீட்க 2 திட்டங்களை வகுத்துள்ள அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com