கோவையில் மாணவிகளை தவறாக பயன்படுத்த முயன்ற விடுதி காப்பாளரை கைது செய்ய வலியுறுத்தல் அதிகரித்துள்ளது.
கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த பெண்களை பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில், விடுதிக் காப்பாளராக பணிபுரியும் பெண் மது அருந்த கட்டாயப்படுத்தியுள்ளார். அத்துடன் அந்த மாணவிகளை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின்னர் அலங்கோலமாக இருந்த விடுதி உரிமையாளரிடம் வீடியோ கால் பேச வைக்கவும் விடுதி காப்பாளர் புனிதா முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருவர் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். அவர்கள் மட்டுமின்றி பலரும் காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.