பட்டியலின மக்கள் மீது சரமாரி தாக்குதல்: வைரலாகும் வீடியோ

நாமக்கல் அருகே பட்டியலின மக்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே மங்களமேட்டில் பட்டியலினத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் மினி வேனில் வேகமாக சென்றதாக தெரிகிறது. குழந்தைகள் விளையாடும் பகுதியில் வேகமாக ஏன் செல்கிறீர்கள் என மனோஜிடம் பட்டியலின நபர் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், ஊருக்குள் சென்று தனது சமூக மக்களை அழைத்து வந்து பட்டியலினத்தவர்களையும் அவர்கள் வீடுகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

நாமக்கல்
நாமக்கல்PT

இதில் காயமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையதளங்களில் பரவின. இதுதொடர்பாக 4 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com