கோடநாடு விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

கோடநாடு விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்
கோடநாடு விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்
Published on

4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தபோது கோடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அதில், சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் கூடும்போது நேரலை செய்யப்படும் என்றும், கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யமுடியவில்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என இபிஎஸ் தெரிவித்தார். அதற்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடத்தது; பிறந்தநாள் விழாவின்போது ரவுடி கத்தியால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது என்று துரைமுருகன் கூறினார்.

அப்போது முதல்வர் குறுக்கிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது? கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். மேலும், கொலை, கொள்ளை நடந்த கோடநாடு சாதாரண இடமில்லை; அந்த குற்றங்களை எதில் சேர்ப்பது? கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனியாரிடம் சென்ற கோடநாடு சொத்துக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும் என்று முதல்வருக்கு இபிஎஸ் பதிலளித்திருக்கிறார். மேலும் குட்கா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியபோது, குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com