இடைவிடாமல் பெய்த மழையால், சாலையில் பேருந்து செல்லாது என்று பயணிகளை பேருந்து ஓட்டுனர் பாதியில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது இருங்கட்டுகொட்டை பகுதியின் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை முடித்து விட்டு புழுதிவாக்கம் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளனர். பாதி தூரம் சென்ற பிறகு, மழை காரணமாக சாலையில் பெருகெடுத்து ஓடிய மழைநீரை கண்டு பேருந்து ஓட்டுனர் பயந்துள்ளார்.
இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு, இதற்கு மேல் பேருந்து உள்ளே செல்லாது சென்று கூறியுள்ளார். செய்வதறியாமல் திகைத்த பயணிகள் கொட்டும் மழையில் நடந்தே சென்றுள்ளனர். அதே போல் முடிச்சூர் பகுதியும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் பேருந்துகள் பாதி வழியிலே பயணிகளை இறக்கி விட்டு செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வெளியில் செல்வதற்கு எந்தவித வாகன உதவியும் இன்றி தவிப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.