சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு காரணமாக ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் குழு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப்புண், குடல் புண் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் மருத்துவர்கள் தெரிவிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் மூளை நரம்பில் ரத்தக்கட்டிகள் உள்ளன. அவற்றை கரைக்க மருந்துகள் வழங்கப்படும்” எனக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்துடன், “மேலும் கழுத்து பின்புறம் அமைந்துள்ள சவ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவே அவரது கடும் தலைவலிக்கு காரணமாக இருக்கக்கூடும். அந்த பாதிப்பை சரி செய்யவும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது” என்று தகவல் வெளியாகியுள்ளது.