செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்; காரணம் இதுதான்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவருடைய மனைவி மேகலா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை பதிவுசெய்துகொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து 6 வாரங்களுக்குள் அமலாக்கத் துறை இணை இயக்குநர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடர்பான முழுத் தகவல்களையும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.