தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் 

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் 
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் 
Published on

கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தேனியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தேனியில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவி "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின்கீழ் உடனடியாக அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com