செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு
Published on

கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், திருமங்கலம், பெரம்பூர், அண்ணாநகர்,அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

இதனிடையே தமிழகத்தில் ஜனவரி 12ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்படுகின்றன. மொத்த கன அடியான 24 அடி உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் பிற்பகல் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி வரை உபரி நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புழல் ஏரியில் இருந்தும் 500 கன அடி வரை நீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மழையின் அளவை பொருத்தளவு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாரவாரி குப்பம், வடகரை, புழல், பெரும்பாக்கம், உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com