தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் தலைமையேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரித்திலும் பங்கு என பல அதிரடியான கருத்துகளை முன் வைத்தார்.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரம் வேண்டும் என முன்னர் கருத்து தெரிவித்திருந்த செல்வப்பெருந்தகையிடம், விஜயின் பேச்சு குறித்து கேட்கப்பட்டது.
உங்களின் கருத்தை பிரதிபலித்திருப்பதால் கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி என்பது எப்போதும் வலுவாக இருந்துவருகிறது. அதில் எந்தவித இடப்பெயர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை, இந்த கேள்வி வருவதற்கான எந்த சூழலும் எங்களுக்கு ஏற்படாது” என்று பேசியுள்ளார்.