ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ 

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ 
ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ 
Published on

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் கண்டிப்பாக இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழக பொதுப்பகிர்வுத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். 

இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பெயர் அளவுக்குக்கூட எதிர்க்காமல், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே, அவரது கருத்து எதிரொலிக்கின்றது என சாடியிருந்தார். 

இந்நிலையில், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் கண்டிப்பாக இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com