ராஜா, சீசிங் ராஜாவான கதை.. யார் இவர்? அதிரவைக்கும் பின்னணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவுக்கு உள்ள தொடர்பு என்ன? யார் இவர், பின்னணிதான் என்ன? விரிவாக பார்க்கலாம்..
சீசிங் ராஜா
சீசிங் ராஜாpt
Published on

செய்தியாளர் - அன்பரசன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சீசிங் ராஜா என்பவர் மீது சந்தேகம் வர, காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Armstrong murder case
Armstrong murder casept desk

ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்திருந்ததாக தெரிகிறது. ஆற்காடு சுரேஷ் மரணத்தை சுற்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கும் உள்ளதால், சீசிங் ராஜா மீது சந்தேகம் எழுந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீசிங் ராஜா
ரெஸ்ட்ரூம் போனாகூட சொல்லனுமா? காங்கிரஸ் மேயருக்கு எழுந்த சிக்கல்! என்ன நடக்கிறது கும்பகோணத்தில்?

ராஜா சீசிங் ராஜாவனது எப்படி?

48 வயதான சீசிங் ராஜா சரித்திரப் பதிவேட்டில் ஏ பிளஸ் குற்றவாளியாக உள்ள நிலையில், தென்சென்னையில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவில் அவர் மீது கொலை வழக்குகள் இருக்கின்றன. இதற்காக பல முறை சிறை சென்றிருந்தாலும், 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீசிங் ராஜா
சீசிங் ராஜாPT

ஆரம்ப கட்டத்தில், வட்டி கட்டாதவர்களை மிரட்டி வாகனங்களை பறித்து தனியார் நிறுவனத்திடம் கொடுத்ததால், ராஜா, சீசிங் ராஜா-வாக உருவெடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என வளர்ந்து ஒரு கட்டத்தில் கொலை, ஆட்கடத்தல் என ஏ பிளஸ் குற்றவாளியாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீசிங் ராஜா
2024 OLYMPICS: தமிழகத்தில் இருந்து 13 வீரர்கள் பங்கேற்பு.. மாநில வாரியாக எத்தனை வீரர்கள்? முழுவிவரம்

5 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள்..

ஆந்திராவில் 2 முறை கைது செய்யப்பட்டுள்ள சீசிங் ராஜா, தாம்பரம், குன்றத்தூர், படப்பை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்களல் ஈடுபட்டுள்ளார். 5 கொலை உட்பட கொலை முயற்சி, ஆட்கடத்தல், பணம் பறித்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளன.

2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட போது, சீசிங் ராஜாவிடம் நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சூழலில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

சீசிங் ராஜா
INDIA at 2024 Olympics: 16 நாட்கள், 16 விளையாட்டுகள், 69 பதக்கங்கள், 112 வீரர்கள்! போட்டி முழுவிவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com