“ராமர் உண்மையில் இருக்கார்...” - சீமான் சொன்ன காரணம்!

“தேர்தல் அரசியலுக்காக ராமர் கோவிலை பாதியில் திறந்தார் மோடி. அதனால் இப்போது அது மழையில் ஒழுகுகிறது. இக்காரணங்களால்தான் அயோத்தி தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றி பெற்றுள்ளார். இது மோடிக்கு பெரும் தோல்வி” - சீமான் விமர்சனம்.
சீமான்
சீமான்ட்விட்டர்
Published on

செய்தியாளர் - காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது மேடையில் பேசிய சீமான், “நம் நாடு ஏழ்மை வறுமையில் சிக்கித் தவிக்கிறது. அதிலிருந்து மீள, அரசியல் மாற்றம் நம் எண்ணமல்ல. இங்கே அடிப்படையே தவறாக இருக்கிறது. இன்று பதவியில் இருப்பவர்கள், தாங்கள் வகிக்கும் பதவியை நிரந்தரம் என்று நினைக்கிறார்கள். சேர சோழ பாண்டியன், முகலாயர், பிரிட்டிஷ் போன்ற சாம்ராஜ்யங்களே வீழ்ந்து போயுள்ளன எனில், நீங்கள் எம்மாத்திரம்? மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவில்லை. வேட்டி, சேலை, மூக்குத்தி கொடுத்து ஓட்டு வாங்கிக்கொள்கின்றீர்கள் நீங்கல்.

சொல்லப்போனால் இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று. ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இத்தொகுதியை முற்றுகையிட்டு பல கோடிகளை கொட்டி வெற்றியை பெறுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது வேலைவாய்ப்பை பெருக்க, அவரவர் வாழ்விடத்தில் தொழிற்சாலை அமைக்கப்படும். உதாரணமாக பனைமரம் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலை அமைத்து கருப்பட்டி, கற்கண்டு, பனைவெல்லம் உள்ளிட்ட பனைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

விக்கிரவாண்டியில் சீமான் பிரசாரம்
விக்கிரவாண்டியில் சீமான் பிரசாரம்ட்விட்டர்

மேலும் ரேஷன் கடைகள் மூடப்படும். அதற்கு பதிலாக நெய்தல் அங்காடி, மருதம் அங்காடி மற்றும் குறிஞ்சி அங்காடி அமைத்து குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்கள் கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும்.

கலப்படத்தை விரும்பாத நம் மக்கள் நம் தாய் மொழியில் கலப்படம் அடைந்த சமூகமாக மாறி வருகின்றனர். அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மனுநீதி சோழன் மாட்டுக்கும் நீதி கொடுத்தவன். தமிழன் யாரையும் அடிமைப்படுத்தி வாழ்ந்தவன் இல்லை. சேர சோழ பாண்டியன் ஆகியோரும்கூட, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை பிடித்து கொடி நட்டு கப்பம் மட்டும் கட்டினால் போதும் என்று தாய் நாட்டிற்கு வருவார்கள்.

விக்கிரவாண்டியில் சீமான் பிரசாரம்
விக்கிரவாண்டியில் சீமான் பிரசாரம்

சாதி மதம் பற்றி பேசும் அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாதியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை மோடி திறந்தார். இப்போது மழையில் ஒழுகுகின்றது. அயோத்தி தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை நிறுத்தி வெற்றி பெற்றது மோடிக்கு பெரும் தோல்வி. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் உண்மையில் ராமர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வருகிறது.

பாகிஸ்தான் பக்கத்து நாடாக இல்லாமல் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா நாடு உள்ள தொலைவில் இருந்தால் இவர்கள் அதைவைத்து அரசியல் செய்ய முடியாது.

இன்றைய தேதியில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன். ஏற்றுமதி செய்து மற்றவர்கள் சாப்பிட்டால் தர்மம், நம் நாட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டால் அடித்து கொல்ல வேண்டுமா?

ஆடு மாடு கோழிக்கு மருத்துவம் பார்ப்பவர், அரசு விலங்கியல் மருத்துவர் என்றால், ஆடு மாடு கோழி வளர்ப்பவர் அரசு ஊழியர் இல்லையா? சாப்பாடு போடும் விவசாயிகள் அரசு பணியாளர் கிடையாது, ஆனால் மதுபானம் ஊற்றி கொடுப்பவர் அரசு ஊழியர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com