அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? - சீமான் கேள்வி

அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? - சீமான் கேள்வி
அக்னிபத் படையில் சேர்ந்தால்தான் தேசப்பற்றா? - சீமான் கேள்வி
Published on

அக்னிபத் படையில் சேர்ந்துதான் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

மதுரை மேலூர் அருகே தும்பைபட்டியில் தியாகசீலர் கக்கன் அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கக்கன் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு தும்பைபட்டி மந்தை திடலில் சீமான் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாழ்வியல் இதனை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை தீர்மானப்பது அரசு. அதனை தீர்மானிப்பது அரசியல். எனவும் டீ, டிபன் எல்லாம் பேச்சுவழக்கில் தமிழாக மாறிவிட்டது, ஆனால் நாம் தேநீர் சிற்றுண்டி என மாற்றமுடியும். நாக்கை கூட திருத்த முடியாமல் நாட்டை எப்படி திருத்துவது. என கேள்வி எழுப்பினார் மேலும், 5ஆயிரம் கோடி முதலீடு செய்து கட்சிகள் முதல் இரண்டாவது இடத்தில் உள்ளனர் , நான் ஒரு பைசா செலவு செய்யாமல் மூன்றாவது இடத்தில் உள்ளேன், நிச்சயம் தமிழகத்தில் மாற்றம் வரும் எற தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி மாணவரிடம் ஆசிரியர் சாதி ரீதியாக பேசியது கண்டிக்கதக்கது. அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமக்களின் தலைவர் ஜனாதிபதி. மக்களாட்சியின் தலைவரே மக்கள் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்வர்களால் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பை மாற்றுங்கள். எல்லோரும் எதிர்க்கும் அக்னிபத் திட்டத்தை ஆளுநர் ஆதரிக்கின்றார்., அமித்ஷா ஆதரிக்கின்றார். ராஜ்நாத் சிங் கூறுகிறார் இப்படையில் சேர்ந்தால் தேசபற்று வரும் என்கின்றனர். இப்படையில் சேர்ந்தால் தான் தேசபற்றா" என சீமான் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com