தமிழக சட்டப் பேரவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே காவல்துறை மானியக்கோரிக்கை இன்று நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானதால் தலைமைச்செயலகம், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே காவல்துறை மானியக் கோரிக்கை இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ள டிஜிபி ராஜேந்திரன், அவசியமின்றி காவல்துறையினருக்கு விடுப்பு அளிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. பணிச்சுமையை குறைக்க வேண்டும், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானதால் தலைமைச் செயலகம், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.