வேளாண் விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் மறிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் அறுவடை வாகனங்களுக்கும், விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எந்த தடையுமில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாக்க அரசின் சேமிப்பு கிடங்கை பயன்படுத்துமாறு ககன்தீப் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர யாரும் வெளியே வரக்கூடாது எனவும் வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிந்துகொண்டுதான் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் பேருந்து, ரயில், விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.