இரண்டாவது ரிக் இயந்திரம் நான்கு மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டியதா ?

இரண்டாவது ரிக் இயந்திரம் நான்கு மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டியதா ?
இரண்டாவது ரிக் இயந்திரம் நான்கு மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டியதா ?
Published on

கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 59 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. சரியாக இன்று அதிகாலை 12 மணி முதல் இரண்டாவது இயந்திரம் செயல்பட தொடங்கியது. 

இந்நிலையில் நான்கு மணி நேரத்தில் 10 அடி துளையிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துளையிடும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் வேகமாக துளையிட முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com