மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,000 லிருந்து 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று வெளியான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 பேருக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1000லிருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை சிவகங்கையில் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், தொழு நோயிலிருந்து மீண்ட பிறகும் கடும் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளோனோருக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.