எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..? தெரிந்து கொள்ள..!

எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..? தெரிந்து கொள்ள..!
எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..? தெரிந்து கொள்ள..!
Published on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும்
சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின்
இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு
சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர்.

இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டிருந்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு
மழை பெய்து மோசமான வானிலை நிலவியதால் புயல் சேத ஆய்வை தொடராத முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சென்னைக்கே திரும்பினார். 

இதைத்தொடர்ந்து 'கஜா' புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார். இதற்காக நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

திருவாரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் மண்ணார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com