தலைமையாசிரியர் மூலம் உதவி கோரி திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி

தலைமையாசிரியர் மூலம் உதவி கோரி திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி
தலைமையாசிரியர் மூலம் உதவி கோரி திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி
Published on

சென்னை அருகே தனக்கு நடக்க இருந்த திருமணத்தை பள்ளி மாணவி துணிச்சலாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

சென்னை புழல் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள், அப்பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயித்துள்ளனர். திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த மாணவி, தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியரிடம் துணிச்சலாக முறையிட்டிருக்கிறார். 

இதுதொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியர் தகவல் அளித்துள்ளார். அவர்கள் மூலம், குழந்தைத் திருமண தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், 18 வயது நிறைவடையாத நிலையில், சிறுமிக்குத் திருமணம் செய்வது கூடாது என பெற்றோருக்கு அறிவுறுத்தி திருமண ஏற்பாட்டை நிறுத்தியுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் வயதிலேயே தனது திருமணத்தைத் தானே துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய சிறுமியை பலரும் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com