மதுரை | பட்டியலின மக்களை புறக்கணித்துவிட்டு ஊர் திருவிழா நடத்த திட்டம்! எழுந்த எதிர்ப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்களை புறக்கணித்துவிட்டு ஊர் திருவிழாவை நடத்த திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பன்னியான் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் திருவிழா நடத்தி வந்துள்ளனர். இந்த கோயிலில் 2012ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அதனால், சிலர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் 12 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இச்சூழலில், மற்றொரு சமூகத்தினர், காவல் துறை உதவியோடு திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த திருவிழா விவகாரத்தில், ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com