சமீப காலமாக அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும், குடும்ப மற்றும் சமுதாய சீர்க்கேடும் பெருகி விட்டதை அன்றாட செய்திகளில் காண முடிகிறது. அதுவும், பதின்ம இளம் பருவத்தினரிடையே இதன் புழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தவகையில், போதைப்பொருள் போன்ற தவறான பழக்கத்தில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது. ஈடுபடவும் வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக காலை 5 மணி அளவியே விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் வருகை புரிந்தார். இதனையடுத்து, மாணவ மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் வருகை தந்த பின்னர், கல்வி விருது வழங்கும் விழா இனிதே நடைப்பெற்றது.
அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்த தவெக தலைவர் விஜய் , மக்களின் நடுவில் அமர்ந்து நலம் விசாரித்தார்.குறிப்பாக, நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துறையின் அருகில் அமர்ந்த அவர், சின்னத்துரையை இன்முகத்தோடு நலம் விசாரித்தார்.
இதனைதொடர்ந்து விழா மேடைக்கு சென்ற தவெக தலைவர் இனிதே தனது உரையை ஆற்றினார். இவர் பேசியது குறைந்த நேரம் என்றாலும், அரசியலில் மாணவர்களின் வருகை, கல்வியின் முக்கியத்துவம், போதைப்பொருளுக்கு say no போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
”ஒரு போதும் தவறான பழக்கத்தில் ஈடுபடாதீர்கள். ஈடுபடவும் கூடாது. உங்களின் அடையாளத்தை எந்த காரணத்திற்காகவும் இழந்துவிடாதீர்கள். don’t loose your identity at any cost. ஏனெனில் சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. முக்கியமாக இளைஞர்களின் மத்தியில் அதிகமாகிவிட்டது.
ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் இது குறித்தௌ எனக்கு அச்சம் இருக்கிறது.
போதைப் பொருளை தடுப்பது அரசின் கடமை, அரசின் கடமை; ஆளும் அரசு அதனை தவற விட்டு விட்டார்கள் என்பதை பற்றியும் நான் பேச வரவில்லை; அதற்கான மேடையும் இது இல்லை. அரசாங்கத்தை விட நமது லைஃபை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்; நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்
”say no to temporary pleasures.. say no to drugs”.. எனக்காக இதை ஒரே ஒரு முறை இதை திரும்பி கூற முடியுமா....இந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார் தவெக தலைவர் விஜய்!
இதோடு கூட கல்வியின் முக்கியத்துவத்தையும் அரசியலில் மாணவர்களின் பங்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தார்..
அதில், “நன்கு படித்தவர்களும் அரசிலுக்கு வர வேண்டும். நல்லதலைவர்கள் வேண்டுமா? வேண்டாமா?... 100% சதவீதம் கடின உழைப்பு கொடுத்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எல்லா துறையிலும் வெற்றி நிச்சயம்.
படிக்கும்போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். உதரணமாக ,ஒரே செய்தியை பல செய்தி நிறுவனங்கள் பல விதமாக எழுதுவதை காணமுடியும். ஆகவே, செய்தி வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக் கொண்டால் பொய் பரப்புரைகளை கண்டறியலாம். “Success is never ending Failure is never final” இதை மட்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து கூறியது, சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 க்கும் மேல் அதிகரித்து வரும் நிகழ்வையும், இச்சம்பவத்திற்கு 19 வயது இளைஞன் மாதேஷ்தான் தலைமை தாங்கியுள்ளார் என்பதையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாணவர்களுக்கு போதைப்பொருள் வேண்டாம் என்ற கருத்தை கூறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.