புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரான பின் மீண்டும் சிறைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றபோது “கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது” என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது சவுக்கு சங்கர் “தமிழக அரசானது தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்துள்ளது. தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவுதான் 33 உயிர்களை இன்று பலி வாங்கியுள்ளது.
கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது” என்று முழக்கமிட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது.