யூ-டியூப் நேர்காணலின் போது காவல்துறை அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக, கோவை சைபர் கிரைம் தரப்பில், சவுக்கு சங்கர் மீது புகாரளிக்கப்பட்டது. இதன்பேரில், தேனி மாவட்டத்தில் இருந்த சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்தது. அவர்மீது உள்ள புகார்கள் குறித்த விவரத்தை, இங்கே காணலாம்:
கைது செய்யப்பட்ட போது, சவுக்கு சங்கரிடம் கஞ்சா இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் இதுவரை 7 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சொல்லும் கருத்தை, பின்வரும் வீடியோவில் காணலாம்...